செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

சரணாகதி மாலை

சரணாகதி மாலை 7வது பாட்டு

மாம் மதீயம் ச நிகிலம்
சேதநா சேதநாத்மகம்,
ஸ்வகைங்கர்யோபகரணம்
வரத ஸ்வீகுரு ஸ்வயம்

(வரத- வேண்டுவதெல்லாம் தருபவனே! வேண்டுவார்களுக்கு வேண்டும் வரங்களை அளிப்பதால் வரதன் என்னும் திருநாமம் உடைய ஸ்வாமியே! மாம் - அடியேனையும் மதீயம் - என்னுடையது என்று பேர்பெற்ற, என்னுடையவை யென்னும் படியான தேசந ஆசெதந ஆத்மிகம் - உயிருள்ளதும் உயிரில்லாதனவுமான, அறிவுள்ளதும் அறிவில்லாததுமான நிகிலம்ச எல்லாவற்றையும் ஸ்வ கைங்கர்ய உபகரணம் - தன்னுடைய கைங்கரியத்துக்கு உரிய ஸாமக்ரியாக, தேவரீருடைய பணிவிடை தொண்டு ஊழியங்களுக்குக் கருவியாக ஸ்வயம்-தானாகவே ஸ்வீகுரு-அங்கீகரித்தருளுக, ஸ்வீகரித்தருள வேண்டும்.
அடியேனையும் அடியேனைச் சேர்ந்த ஸகல வஸ்துக்களையும் தேவரீரடைய கைங்கர்யத்துக்கு உபயோகமாகும்படி செய்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் இதில்
ஹே! வரத! என்னையும் என்னைச் சேர்ந்த சேதநாசேதனங்களாகிய அனைத்தையும் தனது கைங்கர்யத்துக்கு உபகரணமாகத் தானே எடுத்துக்கொள்ளும்.
இச்சுலோகத்தில் இவர் பிரார்த்தித்தபடியே பகவான் இவரை அடிமை கொள்ளுகிறோம் என்ன அதற்கு அமையாது ததிபாண்டாதிகளுக்குப் போல அநுபந்திகளையும் அடிமை கொள்ள வேண்டும் என்கிறார்.
அடியேனையும் அடியேனுடைய பசுபுத்திராதிகளையும் தேவரீருடைய ஊழியத்துக்குத் தக்கபடி உபயோகித்துக் கொள்க.
ஏ வரதனே! தேவரீரிடத்தில் சரணாகதி பண்ணின அடியேனையும் அடியேனுக்குச் சேஷம் என்னும்படி யிருந்துள்ள சேதநர்களையும் அசேதநங்களையும் தேவரீருடைய கைங்கரியத்துக்கு உபயோகமாகும்படி செய்தருள வேண்டும்.
சேதந அசேதந ஆத்மகம் - தத்துவங்கள் மூன்று. அவையாவன: சேதநம், அசேதநம், ஈசுவரன் என்பவை. அறிவுள்ள ஜீவாத்மா சேதநன் எனப்படுவான். இவனுக்கு ஜ்ஞாநம் ஒரு குணமாய் நிற்கும். இந்த ஜ்ஞாநம் தர்ம பூத ஜ்ஞாநம் எனப்பெறும். ஜீவனுடைய ஸ்வரூபமும் ஜ்ஞாந மயமாகவே நிற்கும். ஆதலின் ஜீவன் தர்மபூதஜ் ஞாநம் என்னப் பெறுவான். இந்த ஜீவாத்மா தனக்கு எப்பொழுதும் தோன்றிக் கொண்டேயிருப்பான். தன்னை நான் என்று அறியும் போது தர்ம பூதஜ் ஞாநம் உதவ வேண்டும் என்பதில்லை. ஆனால் ஜீவன் தன்னைத் தவிர வேறு எந்தப் பொருளையும் தன் தர்மபூதஜ் ஞாநத்தால் மட்டுமே அறிய முடியும். தன் ஸ்வரூபத்தைத் தர்ம பூத ஜ்ஞாநத்தைக் கொண்டும் அறியலாம். ஜீவன் அணுவாகவும் ஆநந்த ஸ்வரூபமாகவும் நிற்பவன்; சரீரத்திற் காட்டிலும் வேறுபட்டவன். அழிவற்றவன்; எம்பெருமானுக்கு அடியனாகவே நிற்பவன்; இத்தகைய ஜீவாத்மாக்கள் எண்ணற்றவர்; அவர்கள் பத்தர், முக்தர், நித்யர் என மூவகைப்படும்.
அறிவில்லாத வஸ்து அசேதநம் என்னப்படும். அசேதநத்தால் கிடைக்கக்கூடிய பலனை அநுபவிப்பவன் சேதநனே. இந்த அசேதநம் த்ரிகுணம், காலம், சுத்த ஸத்துவம் என மூன்று வகைப்படும். த்ரிகுணம் என்பதுவே மூல ப்ரக்ருதி. இது சத்துவம் ரஜஸ் தமஸ் என்னும் மூன்று குணங்களை உடையதாதலின் த்ரிகுணம் எனப்பெறும். காலம் என்பது எங்கும் பரந்து நிற்கும் ஒரே த்ரவ்யம். இதில் ஸத்துவம் முதலிய குணங்களில் சுத்த ஸத்துவம் என்பது ரஜோ குணம் தமோகுணம் ஆகிய இரண்டும் இன்றி ஸத்துவ குணத்திற்கு மாத்திரம் ஆதாரமான ஒரு த்ரவ்யம்.
முத்திக் கருள்சூட மூன்றைத் தெளிமுன்ன
மித்திக்கா லேற்கு மிதம்
(தேசிகமாலை அமிருத ரஞ்சனி 3)
(மோக்ஷத்திற்குக் காரணமான பகவானுடைய க்ருபையைப் பெறுவதற்கு சேதநம் அசேதநம் ஈசுவரன் என்னும் மூன்று தத்துவங்களை முதலில் தெரிந்து கொள். இந்த வழியால் உபாயம் பொருந்தும்)
ஸ்வ கைங்கர்ய - இங்குள்ள ஸ்வ என்ற பதம் தன்னையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் சொல்லும். அடியேனையும், அடியேனைச் சேர்ந்தவர்களையும் உனக்கும், உன்னடியார்களுக்கும் கைங்கர்யத்துக்கு உரிய ஸாமக்ரிகளாக அங்கீகரித்தருள வேண்டும்.
இப்படி அருளிச் செய்தவாறே முன்பு "கூழாள் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்" என்று நின்ற மஹாராஜர் தெளிந்து, தாம் பண்ணின அபராதத்திற்கு பெருமாளை க்ஷமை கொண்டு, தாமே புருஷகாரமாய் 'வந்து மண்ணும் மணமும் கொண்மின்', 'எமதிடம் புகுதுக' இத்யாதிகளில் ப்ரக்ரியையாலே 'நாங்களும் ஸ்ரீ விபீஷணாழ்வானும் ஒரு வாசியற அடிமை செய்யப்பெற வேண்டும்;. நாங்களும் இவனுக்கு 'ஸகா தாஸோஸ்மி' என்னும்படி அடியோமாக வேண்டும்' என்று விண்ணப்பம் செய்ய இப்படி ப்ரதி பந்தகம் கழிந்து அநந்தரம் பெருமாளுக்கு சரணாகத லாபமாகிற புருஷார்த்தம் பிறந்த படியையும் 'தத்தமஸ்யா பயம் மயா' என்கையாலே அபயம் பெற்ற சரணாகதனுக்கும், இப்படி விசேஷித்துப்பெருமாள் பாசுரமின்றிக்கே தங்களுக்கு வேறொரு உபாயமின்றிக்கே சரணாகதனுடைய அபிமாநத்திலே அடங்கிக்கூட வந்த ராக்ஷஸர்களுக்கும் பெருமாள் திருவடிகளைப் பெறுமையாகிற பரம புருஷார்த்தம் பிறந்தபடியையும் பர்யங்க வித்யாதிகளில் படியே பரஸ்பர ஸம்ச்லேஷத்தாலே பிறந்த ப்ரீதிபரீவாஹமான ஸம்வாத விசேஷங்களையும் எல்லாம் இந்த ஸர்க்கத்தின் சேஷத்தாலும் மேலில் ஸர்க்கத்தின் முகப்பாலுமாகச் சொல்லி சரணாகதி வேதமான ப்ரபந்தத்திலே உபநிஷத் பாகமான அபய ப்ரதாந ப்ரகரணத்தைத் தலைக்கட்டுகிறான் ஸ்ரீ வால்மீகி பகவான்' (அபய ப்ரதாந ஸாரம். 9. சரண்ய சரணாகத சங்கலாப:)
'தனக்கு சேஷபூதருமாய் பரதந்த்ரருமாய் இருக்கையாலே தன் கைகளும் கால்களும் போலே தன்னிலே சொருகி தனித்து ஓர் உபாய பலங்கள் இல்லாதநாலு ராக்ஷஸரோடே கூட உத்தேச்யமான திருவடிகளைளவும் செல்லவொண்ணாதபடி ஹர்ஸ பாரவச்யம்தள்ள, திருவடிகளோடே பிற வித்துவக் குடைத்தான பூமியிலே விழுந்தான்.**** இப்படி ஒருவன் சரணாகதனாய் திருவடிகளைப் பெறும் போது, அவனைப் பற்றினார்க்கும் அவனுடைய ஆத்மாத்மீய பரஸமர்ப்பணத்திலே துவக்குண்டானபடியாலே, தனித்து பரீக்ஷிப்பாருமின்றிக்கே, ராஜ ஸேவகருடைய ஸ்தநந்தயருக்குப் போலே புருஷார்த்தலாபம் துல்யமாம் என்று 'பசுர்மநுஷ்ய: பக்ஷீ வா யே ச வைஷ்ணவ ஸம்ஸ்ரீயா: தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம் இத்யாதிகளில் சொல்லுகிற சாஸ்த்ரார்த்தத்தை வெளியிடுகிறான் (சதுர்பி : ஸஹராக்ஷஸை:") (அபய ப்ரதாந ஸாரம். 10.ப்ராப்திப் ரகார:) ப்ரபஞ்சது என்பன இவண் அநுஸந்தேயங்கள்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக