வெள்ளி, 24 ஜூலை, 2009

சரணாகதிமாலை

6ம் பாடல் விளக்கம் தொடர்கிறது.

ஈண்டு ஆளப்பெற்ற மேற்கோள்களின் பொருள் வருமாறு:-- மூவிரண்டு குணங்களை உடைய வரதராஜனே! தேவரீருடைய அகில மூர்த்திகட்கும் முதன்மையான பரவாஸு தேவமூர்த்தி கீழ்ச்சொன்ன இந்த ஆறு குணங்களால் விளங்கிற்று. அதற்கு மேல் மும்மூர்த்திகள் அந்த குணங்களுடைய மூவிரண்டுகளாலே பிரகாசித்தன. இப்படிப்பட்ட வ்யவஸ்தை யாதொன்று உண்டு அந்த வ்யவஸ்தை குணங்களை வெளியிடுதல் பற்றியாம். தேவரீரோவெனில் அகில மூர்த்திகளிலுமே எண்ணிறந்த சிறந்த கல்யாண குணங்களையுடையீரா யிராநின்றீர். (வரதராஜஸ்தவம் 16)

பகவானாகிய திருவரங்க நகராதிபனே! பூஜ்யரான தேவரீர் வாஸுதேவாதி வ்யூஹரூபேண அவதரித்து ஞானம் முதலிய ஆறு குணங்களோடுகூடி பரவாஸுதேவர் என வழங்கப்பெற்றவராகி முக்தர்கட்கு அநுபாவ்யராக ஆகின்றீர் ; பலத்தோடு கூடின ஞானத்தோடு கூடி ஞானமும் பலமுமாகிற இரண்டு குணங்களை உடையவராய்க் கொண்டு ஸங்கர்ஷண மூர்த்தியாகி ஸம்ஹாரத் தொழிலை நடத்துகின்றீர் சாஸ்த்ரத்தை அளிக்கின்றீர்; ஐச்வர்ய வீர்யங்களோடு கூடி ப்ரத்யும்ந மூர்த்தியாகி ஸ்ருஷ்டியையும் பண்ணி தர்மத்தையும் ப்ரவர்த்திப்பிக்கிறீர் சக்தி தேஜஸ்ஸுக்களாகிற இரண்டு குணங்களை உடையவராகி அநிருத்த மூர்த்தியாய் ரக்ஷணத் தொழிலை நடத்துகின்றீர்; தத்வஜ்ஞாந ப்ரதாநமும் பண்ணுகின்றீர் (ஸ்ரீரங்கராஜஸ்தவம், 2-39.)

திருவரங்கநாதரே! விழித்துக் கொண்டிருப்பாரும், உறங்கிக் கொண்டிருப்பாரும், ஸுஷுப்தியில் இருப்பாரும், மூர்ச்சா தசையில் இருப்பாருமான த்யாநம் செய்பவர்களின் ரீதிகளையுடைய அதிகாரிகளாலே உபாஸிக்கத் தகுந்தவராய் தகுதியான பரிச்சதங்களை உடையவராய் நான்கு வகையாக வ்யூஹசதுஷ்டயத்தை வஹிக்கின்றீர் (ஸ்ரீரங்கராஜஸ்தவம், 2-40)

ஜ்ஞாநசக்தி பலைச்வர்ய வீர்ய தேஜஸ்ஸுக்கள் என்கிற சிறந்த ஆறு குணங்களும் பரவாஸு தேவமூர்த்தியிலே புஷ்கலங்கள் என்றும், எம்பெருமானுக்கு மற்றும் உள்ள அநந்த கல்யாண குணங்களுள் இந்த ஆறு குணங்களே சிறந்தவை என்றும், இக்குணங்கள் அடியாகத்தான் இவற்றின் சாகோபசாகைகளாக இதர குணங்கள் பெருகுகின்றன வென்றும், "ப்ரக்ருஷ்டம் விஜ்ஞாநம் பலமதுல மைச்வர்ய மகிலம் விமர்யாதம் வீர்யம் வரத பரமா சக்திரபிச, பரம் தேஜச்சேதி ப்ரவரகுண ஷட்கம் ப்ரதமஜம் குணாநாம் நிஸ்ஸீம்நாம் கணநவிகுணாநாம் ப்ரஸவபூ;" என்ற சுலோகத்தில் (வரதராஜஸ்தவம், 15) கூரத்தாழ்வான் பணித்துள்ளான்.

(i) ஜ்ஞாநமாவது -- எப்போதும் ஸ்வத: ஏக காலத்தில் பஞ்சேந்த்ரியங்களினாலும் அறியக் கூடியவற்றை யெல்லாம் ஸாக்ஷாத்கரிக்கை.
(ii) சக்தியாவது -- ஸ்வ ஸங்கல்ப மாத்திரத்தால் அஸங்க்யேயமான புவநங்கட்கும் உபாதாந காரணமாகை.
(iii) பலமாவது-- ஸமஸ்தசித் அசித் ஸமூகங்களையும் சிறிதும் இளைப்பின்றித் தாங்கும் வல்லமை
(iv) ஐச்வர்யமாவது -- ஸ்வாதந்தர்யத்தோடு எங்குந் தடையின்றிச் செல்லும் ஸங்கல்பத்தையுடைமை.
(v) வீர்யமாவது -- தான் உபாதாந காரணமாகிச் சேதநா சேதநங்களை உண்டாக்கியும் தனக்கு ஒரு விகாரமின்றிக்கேயிருக்கை.

(vi) தேஜஸ்ஸாவது -- வேறொருதவியின்றி அடைந்தாரது தாபங்களைப் போக்கியும் எதிரிகட்குத் தாபத்தைத் தந்தும் போருந்தன்மை.

(1) அஜடம் ஸ்வாத்ம ஸம்போதி
நித்யம் ஸர்வாவகாஹநம்,
ஜ்ஞாநம் நாமகுணம் ப்ராஹு:
ப்ரதமம் குணசிந்தகா:
[குணத்தைச் சிந்திக்குமவர்கள் முதலில் ஜ்ஞாநம் என்று பிரஸித்தமான குணம் அஜடமாயும், தன்னைத்தானே அறிகிறதாயும், நித்யமாயும், எல்லா விஷயங்களையும் பிரகாசிப்பதாயும் இருக்கும் என்று சொல்லுகிறார்கள். ஜ்ஞாநமாவது -- எப்பொழுதும் எல்லாவற்றையும் தெளிவாக விளக்கக்கூடியதாயும், தனக்குத்தானே பிரகாசமாயும் உள்ள குண விசேஷம்.]

(2) ஜகத் ப்ரக்ருதிபாவோ
யஸ்ஸக்தி ப்ரகீர்த்தித:
[ஜகத்திற்குக் காரணமா யிருப்பது யாதொன்று உண்டோ அது சக்தி என்ற சொல்லப் படும். சக்தியாவது -- ஜகத்காரணமா யிருக்கின்ற குண விசேஷமாதல், அகடித கடனா ஸாமர்த்யமாதல் -- சேராதவற்றைச் சேர்ப்பது]

(3) பலம் தாரண ஸாமர்த்யம்
[பலமாவது -- எல்லா வஸ்துக்களையும் தாங்கும் ஸாமர்த்யம்]

(4) கர்த்ருத்வம் நாமயித்தஸ்ய
ஸ்வாதந்தர்ய பரிப்ரும்ஹிதம்
ஐச்வர்யம் நாமதத்ப்ரோக்தம்
குணதத்வார்த்த சிந்தகை:

[அந்த பரமாத்மாவுக்கு ஸ்வாதந்தர்யத்தோடு கூடின யாதொரு கர்த்தாவா யிருக்குந் தன்மை பிரஸித்தமா யிருக்கிறதோ அது, குணங்களின் உண்மை யறிந்தவர்களாலே ஐசுவர்யம் என்ற பிரஸித்தமான குணமாகச் சொல்லப் பெற்றது. ஐச்வர்யமாவது -- எல்லாவற்றிற்கும் கர்த்தாவா யிருத்தலின் லக்ஷணமான ஸ்வாதந்தர்யம் அல்லது எல்லா வஸ்துக்களையும் நியமிக்கும் ஸாமர்த்யம்.]

(5) தஸ்யோபாதாந பாவேபி
விகாரவிரஹோஹிய:
வீர்யம் நாமகுணஸ்ஸோயம்
அச்யுதத்வாபராஹ்வய
[ஸர்வேசுவரனுக்கு ஜகத்துக்கு பாதான காரணமாயிருக்கும் நிலைமையிலேயும் விகாரமின்மை யிருக்கின்றது. இங்ஙனம் இருக்கின்ற அந்த அவிகாரத்வமானது வீர்யம் என்ற பிரஸித்தமான குணம் என்று சொல்லப்படும். அதுவே அச்யுதம் என்ற வேறு பெயராலும் அழைக்கப் பெறும். வீர்யமாவது -- ஜகத்திற்கு பாதான காரணமாயிருந்தும் ஸ்வரூப விகாரமில்லா திருக்கும் அவிகாரதை -- விகாரமில்லாதிருத்தல்.]

(6) தேஜஸ்ஸாவது -- ஸஹாயத்தை யபேக்ஷியாதிருத்தல்

"செழுங்குணங்க ளிருமூன்று முடையார்" என்பது இவ்வாசிரியர் அருளிச் செய்த திருச்சின்னமாலை (5)ப்பாசுரவடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக