Doc தர்மசங்கடம்முன்னைய இடுக்கமான காலங்களிலும் தன் பணியாளார்களை துரத்தாத ஒரே நிறுவனமாக இருந்த மைக்ரோசாப்டே இப்போது தன் evangelist-களை கழற்றிவிட தொடங்கியிருக்கின்றது. மந்த நிலையின் உக்கிரம் இன்னும் வெட்ட வெளிச்சமாகி இருக்கின்றது. சும்மானாச்சும் சர்கியூட்சிட்டியின் இணையதளம் போய் பார்த்தேன். 60 வருடமாய் கோடீஸ்வரனாயிருந்த ஒருவன் கோமணத்தோடு தெருவில் நிற்பதைபோல உணர்ந்தேன். 34000 பேரின் வேலைக்கு கல்தா.எங்கு போய் கொண்டிருக்கிறோம் ஒன்றுமே புரியவில்லை.இன்றைக்கு வேலை ஒன்றில் இருக்கின்றேன்.காலையில் வேலைக்கு போகும் போது கூட அதே உலகம் அதே சம்பளம். பெரியதாய் மாற்றம் ஒன்றும் இல்லை.என்னமோ ரிஷசன் என்கின்றார்கள். அதன் அர்த்தம் அப்போது புரிந்திருக்கவில்லை. மாலையில் வீடு திரும்பும் போது உனக்கு வேலை இல்லை என்றார்கள். இப்போது புரிகின்றது.என் உலகமும் மாறி இருக்கின்றது.
பயோடேட்டாக்கள் மின்னஞ்சலில் பறந்துகொண்டிருக்கின்றன.தங்குவதற்கு கூடு கிடைக்கும் வரை அவை பறந்துகொண்டே தான் இருக்க வேண்டும். நம்பிக்கையை மட்டும் விட்டுவிடக்கூடாது. நண்பன் ஒருவன் தன் "ரெஸ்யூமை" Doc வடிவில் அனுப்பியிருந்தான். நம்மில் பெரும்பாலானோர் இதுமாதிரி Doc வடிவில் தான் Resume-களை வைத்திருக்கின்றோம். அவன் ரெஸ்யூமை திறந்து அதன் Properties-ஐ எதேச்சையாக பார்த்தால் அடப்பாவி Title : Robert`s resume என இருந்தது. Author : Robert Wood என இருந்தது. யாரோ ஒருவருடைய Biodata-வை அப்படியே காப்பி அடித்திருக்கின்றான் இவன். உள்ளே அழகாக தன் பெயரை போட்டு எடிட் செய்த அவன் இந்த Word டாக்குமெண்டுகள் தன் கூடவே தாங்கி செல்லும் இந்த Properties metadata தகவல்களை மாற்ற மறந்திருக்கின்றான். அல்லது அவனுக்கு இந்த விஷயம் தெரியாதிருந்திருக்கின்றது. இது போல காப்பி செய்யும் போது உள்தகவலை மட்டும் உங்கள் தேவைக்கேற்ப மாற்றம் செய்வதோடல்லாமல் மறக்காமல் metadata எனப்படும் Title, Author, Subject, Keywords போன்றவற்றையும் உங்களுக்கேற்றார் போல் எடிட் செய்குதல் நமக்கு நல்லது அல்லது குறைந்த பட்சம் இலவச Doc Scrubber மென்பொருள் கொண்டாவது அந்த metadata-களை சுவடே இல்லாமல் எளிதாக அழித்துவிடுவது புத்திசாலித்தனம். இன்டர்வியூக்களில் அனாவசிய தர்மசங்கடங்களை தவிர்கலாம்.(படவிளக்கம்:மேலே உள்ள கோப்பு பெயர் அது கோபாலின் ரெஸியூம் என்கின்றது.ஆனால் அதன் Properties-ஸோ அது வேறு தகவல்களை சொல்கின்றது.)
Download Doc Scrubber
http://www.javacoolsoftware.com/docscrubber.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக