வியாழன், 18 ஆகஸ்ட், 2016

अभीतिस्तव:

சுலோகம் 9

त्रिवर्गपथवर्तिनां त्रिगुणलङ्घनोध्योगिनां
द्विषत्प्रमथनार्थिनां अपि च रङ्गदृस्योदया |
स्खलत्समयकातरीहरणजागरूका: प्रभो !
करग्रहणदीक्षिता: क इह ते न दिव्या गुणा: ||

 

த்ரிவர்க₃பத₂வர்த்திநாம் த்ரிகு₃ணலங்க₄நோத்₄யோகி₃நாம்
த்₃விஷத்ப்ரமத₂நார்த்தி₂நாம் அபி ச ரங்க₃த்₃ரு̆ஸ்யோத₃யா |
ஸ்க₂லத்ஸமயகாதரீஹரணஜாக₃ரூகா: ப்ரபோ₄ !
கரக்₃ரஹணதீ₃க்ஷிதா: க இஹ தே ந தி₃வ்யா கு₃ணா: ||

 

ப்ர‌போ -- என் ப்ர‌புவே!, த்ரிவ‌ர்க்க‌ப‌த‌வ‌ர்த்திநாம் -- த‌ர்ம‌ அர்த்த‌ காம‌ங்க‌ளைக் கோருகிற‌வ‌ருக்கும், த்ரிகுண‌ ல‌ங்க‌நோத்யோகிநாம் --- ப்ர‌கிருதி ம‌ண்ட‌ல‌த்தைத் தாண்ட‌ வேண்டுமென்ற‌ எண்ண‌த்துட‌ன் ப்ர‌ய‌த்த‌ன‌ப்ப‌ட்டு கைவ‌ல்ய‌த்தையும் மோக்ஷ‌த்தையும் கோருகிற‌வ‌ருக்கும், த்விஷ‌த் ப்ர‌ம‌த‌நார்த்திநாம் அபி -- (பெருமாளுடைய‌வோ அல்ல‌து த‌ன்னுடைய‌வோ) ச‌த்ருக்க‌ளின் நிர‌ஸ‌க‌த்தைக் கோருகிற‌வ‌ருக்கும், ர‌ங்க‌த்ருஶ்யோத‌யா -- அர‌ங்க‌த்தில் ப்ர‌த்ய‌க்ஷ‌மாக‌ அனுப‌வ‌த்திற்கு வ‌ரும‌வையும், ஸ்க‌ல‌த்ஸ‌ம‌ய‌ காத‌ரீ ஹ‌ர‌ண‌ ஜாக‌ரூக‌ -- த‌ட‌ங்க‌ல் வ‌ரும் கால‌த்தில் சேரும் ப‌ய‌த்தை வில‌க்குவ‌தில் தூங்காம‌ல் விழித்து ஜாக்கிர‌தையாய்க் காத்துக்கொண்டிருப்ப‌துமான‌, தே திவ்யா: குணா -- உம்முடைய‌ திவ்ய‌ குண‌ங்க‌ள், இஹ‌ -- இங்கே, க‌ -- எவை, க‌ர‌ க்ர‌ஹ‌ண‌ தீக்ஷிதா -- கை கொடுத்து ர‌க்ஷிப்ப‌தையே தீக்ஷையாக‌ (வ்ர‌த‌மாகக்) கொண்ட‌வைய‌ல்ல‌

அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமி

அறமுதலாம் மூன்றுதனில் அகம்படிந்து துணிவோர்க்கும்
அல்லல்மிகு வாழ்வென்னும் ஆழ்கடலைக் கடந்துசெலும்
பெருமுயற்சி செய்வோர்க்கும் பணிந்துன்னை வாழ்வார்தம்
பகைவர்கள் ஒழிந்திடவே மனம்கொண்ட அடியார்க்கும்
நெறிதவறும் சமயத்தில் நேருகின்ற அச்சத்தை
நீக்குவதில் கருத்துடனே நீள்கரத்தால் காத்திடவே
பெருநகராம் அரங்கத்தில் பள்ளிகொண்ட பெருமானுன்
பல்குணத்துள் எவையேதாம் விரதத்துடன் நிற்கவில்லை? 9.

அன்பில் ஏ.வி.கோபாலாசாரியார் ஸ்வாமி

ப‌ர‌மைகாந்தி ஒருவ‌ர் ஒருக்கால் வ‌ஸித்தால் ஏற்ப‌டும் ர‌க்ஷையைக் கூறினார். அந்த‌ ர‌க்ஷையும் ர‌ங்க‌த்தில் நித்ய‌வாஸ‌ம் செய்ய‌ விரும்பும் எம‌க்கே ர‌க்ஷை. எம்மைக்காத்து எம் இஷ்ட‌த்தைப் பூர்த்தி செய்ய‌ உம்முடைய‌ திவ்ய‌குண‌ங்க‌ளே போதும் என்கிறார்.

"ஆர்த்த‌ன், கைவ‌ல்ய‌த்தை விரும்பும‌வ‌ன், அர்த்தத்தை விரும்பும‌வ‌ன், மோக்ஷ‌த்தில் ஆசையுள்ள‌வ‌ன், என்ற‌ நால்வ‌ர் என்னைப் ப‌ஜிக்கிறார்க‌ள்" என்றார் கீதையில். இவ்்விட‌த்திற் கேற்ப‌ இங்கே ஒருவ‌கையான‌ விபாக‌ம். (1) த‌ர்மம் அர்த்த‌ம் காமம் மூன்றையும் விரும்புகிற‌வ‌ர்க‌ள் (2) ப்ர‌க்ருதியை வில‌க்கி (ஜ‌யித்து) கேவ‌லாத்மாநுப‌வ‌த்தை ஆசைப் ப‌டுகிற‌வ‌ர்க‌ள் (3) ப்ர‌க்ருதியைத் தாண்டி மோக்ஷ‌ம் செல்ல‌ இச்சிப்ப‌வ‌ர்க‌ள் (4) (பெருமாளுக்கு விரோதத்தைச் செய்வ‌தால்) ந‌ம‌க்கு விரோதியான‌வ‌ர்க‌ளை நிர‌ஸிக்கக் கோரும் நாம்.

பெருமாள் திருமேனிக்கு வ‌ரும் கெடுதியே ந‌ம‌க்கு ஆர்த்தி. அவ‌ர் திருமேனிக்குச் ச‌த்ருக்க‌ளே ந‌ம‌க்குச் ச‌த்ருக்க‌ள். அவ‌ர் திருமேனி தீங்கின்றி விள‌ங்குவ‌து ந‌ம் காமம். பிர‌கிருதி வியுக்த‌மாக‌ப் பிர‌கிருதி ஸ‌ம்ப‌ந்த‌மில்லாம‌ல் கேவ‌லாத்மாநுப‌வ‌ம் இருப்ப‌தால், கைவ‌ல்யார்த்தி க‌ளையும் "ப்ர‌க்ருதில‌ங்க‌நார்த்திநாம்" என்ப‌தால் சேர்த்து ஸ‌ங்க்ர‌ஹிக்க‌லாம்.

நீர் தூங்குகிற‌துபோல் பாவ‌னை செய்தாலும், உம் குண‌ங்க‌ள் விழித்துக்கொண்டே இருந்து எங்க‌ளைக் கைதூக்கி ர‌க்ஷிக்கும். ர‌க்ஷ‌ணைக‌ தீக்ஷித‌ரான‌ பெருமாள்போல‌, அவ‌ர் திவ்ய‌ குண‌ங்க‌ள் க‌ர‌க்ர‌ஹ‌ண‌ தீக்ஷித‌ங்க‌ள். த‌ர்மார்த்த‌ காம‌ங்க‌ளும் கைவ‌ல்ய‌ யோக‌மும் மோக்ஷ‌த‌சையில் அங்குர‌மான‌ அனுப‌வ‌மும் இந்த‌ அர‌ங்க‌த்தில் உம்மை ப‌ஜிப்ப‌தால் உம் குண‌ங்க‌ள் கொடுக்கக் கிடைக்கின்ற‌ன‌. அப்ப‌டியே இத‌ற்கு விரோதிக‌ளை நிர‌ஸிக்க‌ வேண்டும் என்ற‌ எங்க‌ள் ம‌னோர‌த‌மும் உம் குண‌ங்க‌ளின் வ‌லிமையினால் நிறைவேறி, நீர் கோயிலில் நித்ய‌மாக‌ எழுந்த‌ருளியிருந்து ஸேவை ஸாதிக்க‌ வேண்டும் (9)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக