ஏற்கனவே பல முறை இங்கு இட்டு விட்டதால் வேண்டாம் என நினைத்தாலும், பரமக்குடி இராகவன் மற்றும் பலரின் வேண்டுகோளை ஏற்று இங்கு திருப்புல்லாணி பங்குனி உத்ஸவ காட்சிகளை இந்த வருடமும் தொடர்கிறேன். பலரின் என்பதில், புதிதாக கணினி பயிலத் தொடங்கியிருக்கும் அடியேனின் இல்லக் கிழத்தியும் அடக்கம். (அதிலும் காலை 5 மணிக்கே சென்னையிலிருந்து அழைத்து ஏன் இன்னும் பதிவிடவில்லை என்று அதட்டல் வேறு) ஆகவே பார்த்தவைகளையே மீண்டும் காட்டுகிறேனே என ஆயாசப் படவேண்டாம். மேலிட உத்தரவுகளை மீற முடியாது.
முதலில் எங்கள் ஸ்ரீ ஆதி ஜெகன்னாதனின் திருவடி ஸேவை கீழே! இன்று ஆண்டவன் ஆச்ரம மண்டகப்படி அன்று திருப்புல்லாணி மணியாரம் சீனிவாச ஐயங்கார் குடும்ப உபயமாக புதிதாகத் தங்கப்பால் தோய்த்தது
துவஜாரோஹணக் காட்சிகள் சில இங்கு வீடியோவாக!
நாலாம் திருநாளில் பெருமாள் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமத்திற்கு எழுந்தருளி திருமஞ்சனம் செய்து கொண்ட காட்சிகள், அதன்பின் மாலையில் நடந்த இரட்டை கருடவாகனப் புறப்பாடு காட்சிகள் இங்கு. ஸ்ரீமத் ஆண்டவனிடம் இங்குள்ள இராமநாதபுரம் தேவஸ்தான அதிகாரிகள், திருப்புல்லாணி ஆலய அர்ச்சகர்கள், மற்றும் கைங்கர்யபரர்கள் கொண்டுள்ள பெரும் அபிமானம் காரணமாக, சமஸ்தான திவான் அவர்களே மாலையில் நேரில் வந்து அழைத்துச் சென்று மரியாதைகள் செய்தார் என்பது விசேஷம்.. பெதுவாகவே திருப்புல்லாணி ஆண்டவன் ஆச்ரம விசேஷங்கள் எதுவாயிருந்தாலும் திருப்புல்லாணி ஆலயத்தில் உள்ளவர்கள் அனைவரும் தங்கள் கோவில் விசேஷம் போல் ஈடுபாட்டுடனும், அன்போடும் கலந்துகொண்டு முழு ஒத்துழைப்பு தருவது இங்கு க்ருதக்ஞையுடன் குறிப்பிடத்தக்கது.
4ம் திருநாள் காலையில் ஆண்டவன் ஆச்ரமத்தில் நடந்த திருமஞ்சன வீடியோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக