புதன், 5 ஜனவரி, 2011

வேதாந்த குரு மாலை

IMG“தேசிக னென்னு மாசான்
          தெளிவொடு பொறுமைச் சீரும்
வீசிய கடல்நீர்ப் பாரில்
           விளைத்தபல் விநோதக் கூட்டும்
பேசிட வல்லார் யாரே?”

  நம் ஸ்வாமி தேசிகன் விஷயமாக கந்தாடை மன்னப்பய்யங்கார் எழுதியருளிய நூற்றந்தாதி பற்றி அனைவரும் அறிவோம்.  திருவல்லிக்கேணி தமிழ்ச் சங்கம், திருவேங்கடத்தான் திருமன்றம் போன்றவை  பதிப்பித்த அந்த அழகான நூற்றந்தாதிக்கு, “ஸ்ரீ ஹயக்ரீவ ஸேவக'” இதழில் ஒப்பிலியப்பன்கோவில் கோபாலதேசிகாச்சார் ஸ்வாமி எழுதிவந்த அற்புதமான உரையையும் பலர் படித்து பரவசப்பட்டோம்.

   அதே கந்தாடை மன்னப்பய்யங்கார் ஸ்வாமி தேசிகன் மேல் ஒரு சந்த விருத்தமும் இயற்றி அதுவும் திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப் பட்டுள்ளது. மிக அழகாக அமைந்துள்ள அந்நூலை இங்கு ஓரிரு நாட்களில் முழுவதுமாக இடுவேன். சந்தமும் ஓசையும் கொஞ்சும் அந்த 36 பாடல்களை நமது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து தினமும் ஓத வைத்தால் நம் வேதாந்த குருவின் அருளும், அவர்மூலம் ஸ்ரீ ஹயக்ரீவன் அருளும் வம்ச பரம்பரைக்கும் கிட்டும் என்பது நிச்சயம்.  “பூதலத்தை யோரடி யளந்த ரூபமான” எனத் தொடங்கும் பிரசித்தமான ஸ்ரீராமர் தோத்திர மெட்டிலேயே அருமையாகப் பாட முடிகிறது. அடியேன் குரலிலேயே பாடிப் பதிவு செய்து இடலாம் என நினைத்தேன். எப்போதாவது எட்டிப் பார்க்கிறவர்களையும் ஒதுங்கி ஓடவைத்துவிடும் என்பதாலே தவிர்த்து விட்டேன்.

“பூவின்மன்னு மங்கைதாள் பொருந்துமார்ப னார்புகழ்
யாவுமங்கம் வேதநான்கு பாடுமாற னாகம
மேவியோங்கு பாச்சியம் விதித்தயோகி நாமமே
நாவிலங்கு தூப்புலய்யர் பாதநண்ணு நெஞ்சமே.”

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக