புதன், 14 ஜனவரி, 2009

எளிதாய் பயணம் செய்ய

 

 

தற்பொழுதெல்லாம், இணையம் மூலம் இரயில்வே, விமானம் ,ஹோட்டல் ஆகியவற்றிக்கு இடம் உள்ளதா (availability) என்று பார்ப்பதும், அவற்றை இணையம் மூலம் Book செய்வதும் அதிகரித்து விட்டது.
சரி..
இரயிலில் பயணம் செல்ல வேண்டும் என்றால் என்ன செய்வோம்? என்னைமாதிரி புத்திசாலிகள் www.irctc.com க்கு போய், ஒவ்வொரு வண்டியிலும் இடம் இருக்கிறதா என்று பார்த்து கொண்டு இருப்போம். அப்படித்தானுங்க நான் இதுவரை இருந்தேன்..இதுல என்னான்னா, அந்த இணைய தளம் அதிகமான நேரம் வேலையே செய்யாது..
அது ஒரு புறம் இருக்க, தகவலை பெற காத்திருந்து, காத்திருந்து வெறுத்து போக வேண்டியதுதான்..
இப்படியிருக்கும் பொழுதுதான், எனக்கு www.cleartrip.com என்ற தளம் என் நண்பர் மூலம் தெரியவந்தது. அதில், ஒரே நேரத்தில் நாம் செல்லவிருக்கும் ஊருக்கு உள்ள அனைத்து ரயில் வண்டிகளிலும் availability status - ஐ பார்க்க இயலும் (that means, we can click "check availability"option on all trains). அதிலும் வெகு விரைவாக நிலவரத்தை காண இயலும். அதனால், நமக்கு நேர விரயம் குறையும். அதிலேயே டிக்கெட்டும் (இ-டிக்கெட்) வாங்கிவிடலாம்.
www.cleartrip.com முயன்று பாருங்களேன்.. உபயோகமாக இருக்கிறதா என்று....

நன்றி முத்தமிழ் மன்றம்

1 கருத்து: