ஞாயிறு, 10 ஜூன், 2007

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகை கீர்த்தனைகள்

                       தரு--- இராகம்---பூரிகல்யாணி தாளம் --ஆதி


                                                 பல்லவி

தெள்ளியார் வணங்குமலை—திருவேங்கடமலை

ஸ்ரீநிவாஸனுறைமலையே.

அனுபல்லவி

வெள்ளிநிறங்கொண்டபுள்ளிமானோடியாடித்

துள்ளிவேங்கைப்புலியைத்தள்ளியாடுமலை (தெள்ளி)

சரணங்கள்

விளங்கும்பிர்மாண்டத்திலொருபக்கத்திலுமிந்த

வேங்கடாத்ரிக்கு நிகரேது

வளங்கொண்டளவில்லாதசருவரத்தினமய

கிரிமண்டலத்தில்புண்ணிய ஸ்தலமீது

களங்கமில்லாஸ்வயம்புஐந்துபனிடபரூப

வேங்கடபூதரமென் றெங்குமோது

உளங்கொண்டபிரிதிநாராயணர்க்கிந்தமலை

யுன்னதப்பிரஸன்னமிகுசொன்னமுயர்நன்னளினம் (தெள்ளி)

பாற்கடல்வைகுந் தமிரவிமண்டலமத்தி

பகருமிந்தமூன்றெனுந் தானம்


பார்க்கிலதிகமெங்களலர்மேன்மங்கைரமண

பரமபுருஷர்க்கு நிதானம்

தீர்க்கமிதுவாமென்றேயாழ்வார்கள்பாடல்பெற்ற

திவ்யதேசம்விளங்கும் விமானம்

ஏற்குங்கோனேரித்தீர்த்தமகிமையுமதின்தென்பா

லெந்தாதைவைகுந்தாதிபனந்தாவிலாசந்தானிது (தெள்ளி)

கலியுகத்தினிலிந்தவுலகந்தனிலேயார்க்குங்

கண்கண்டதெய்வமாக நின்றே

வலியடிமைகொண்டுவினையெல்லாந்தீர்த்துமவர்

மனதபீஷ்டந்தருவ தொன்றே


பலவும்வேங்கடத்தாய்நால்வேதப்பண்ணகத்தாயென்று

பரமபத்தர்பாடினா ரென்றே

சொலவும்பூமகளுடன்கூடிக்கண்னன்வளருஞ்

சுந்தரமிகுந்துபலகிரந்தமறையிந்தமலை (தெள்ளி)


விருத்தம்

திசைதிசையின்வேதியர்கள்சென்றிறைஞ்சுந்

திருவேங்கடத்தானேதெய்வமென்றே

அசையாதாராதனஞ்செய்திருந்தாரெங்க

ளநந்தாசாரியரிப்பால்வேங்கடேசன்

உசிதமாந்தரிசனத்தின்விரோதமெல்லா

மொழிப்பதுநாவுடையரலாகவேண்டி

இசையுள்ளதிருமணியாழ்வானையிப்ப

டிச்செய்தாரவதரிப்பிக்கச்செய்தாரே.

கலிநிலைத்துறை

திருவாழிதிருச்சங்கைத்தொண்டமான்

சக்கரவர்த்திக்கீந்தேயச்சத்

துருவெல்லாந்துடைத்ததுபோல்வேங்க

டேசனம்மநந்தசூரிபாலே

அருள்செய்துதிருமணியாழ்வாரை

யவதரிப்பிக்கவன்பாயெண்ணி

யொருநாளிராத்திரிச்சொப்பனத்தி

லெழுந்தருளியதும்யோகந்தானே.

தரு---இராகம்-மத்தியமாவதி---தாளம்—ஆதி

பல்லவி

மனந்தனில்மறவேனே – மகிமையை

மனந்தனில்மறவேனே.

அனுபல்லவி

மனந்தனில்மறவாதவநந்தாசாரியர்தஞ்சொப்

பனந்தனிலெழுந்தருளி நந்தநந்தனர்வந்தார் (மன)

சரணங்கள்

நீர்நம்மைத்திருவடி தொழவாருமலைமேலே

நிறைந்தகிருபைசெய்தும்மை யாள்கிறோம்பரிவாலே

சேர்வைதந்துசந்தானந் தருவோமென்றதினாலே

தெளிந்தநந்தாசாரியருந்தேவிகட்குச்சொன்னதாலே (மன)

தம்பதியிவர்கள்தாமே நலமாஞ்சொப்பனம்பண்டு

தரிசனத்தையனுசந்தித் திருந்தாரன்புகொண்டு

எம்பெருமானந்த இரவினிற்கண்முன்கண்டு

இவர்கட்கருள்செய்தாப்போ லெவர்களிடத்திலுண்டு (மன)

அதிசயமிதுவென்று பெருங்கூட்டத்துடன்கூடி

அநந்தாசார்யருந்தேவிகளு மன்பாகநாடி

பதியென்னுந்திருமலைக் கெழுந்தருளிகொண்டாடி

பண்பார்ஸ்ரீநிவாசனைப் பணிந்தவகையைப்பாடி (மன)

விருத்தம்

திறமைசேரநந்தாசாரியர்க்குந்தோதா

தேவிகட்குஞ்சொப்பனத்தில்வேங்கடேசன்

சிறுபிள்ளையாய்கோயினின்றும்வந்து

தெவனையீர்நம்மைநிகர்புத்திரன்றன்னை

உறுதியாயுங்களுக்குத்தந்தோமிந்த

வுயர்ந்ததிருமணியைக்கைக்கொள்வீரென்ன

மறைவல்லோர்திருமணியையிருகையேந்தி

வாங்கினாரற்புதமெய்ப்பாங்கினாரே.

இதுவுமது

திருமணியாழ்வாரையிவர்கையில்வாங்கித்

தேவிகள்கையிற்கொடுக்கவவரும்வாங்கி

யொருமையாய்நிற்கிறபோதிந்தப்பிள்ளை

யும்மணியைவிழுங்கெனவேவிழுங்கக்கண்டார்

இருவர்களுமிப்படிக்கேகண்டதாக

விசைந்துமனதன்புடனேயுற்றார்கட்கே

அருமையெல்லாமருள்செய்தார்வேங்கடேச

ராட்கொண்டார்நல்லதிருநாட்கொண்டாரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக